Dark Mode Light Mode

அருகம்புல் சாறு நன்மை

அருகம்புல் சாறு நன்மைகள் தானகவே முளைக்கக் கூடிய மூலிகையாகும். இது வயல், நீர்த் தேக்கம் ஆகிய இடங்களில் அதிகமாகக் கிடைக்கின்றது. இது சித்த மருத்துவத் துறையில் செய்முறையில் அதிக அளவில் உபயோகத்தில் இருக்கிறது. இந்த அருகம்புல்லினிலே நோய்களை நீக்கக் கூடிய சிறப்பம்சங்கள் அதிக அளவில் இருக்கிறது.

அருகம்புல் சாறு நன்மைகள்:-

  • பலகீனம், மூளை பாதிப்பு, தாது விருத்தி, குடைச்சல், வாய்வு, வயிற்று நோய், மூல நோய், ஞாபக சக்தி, ரத்தக் கொதிப்பு, பித்தம் தொடர்பான உஷ்ண வியாதிகள், வெட்டை, தலைபாரம், ஆஸ்துமா, கைகால் வலி, ஊட்டச் சத்துக் குறைவினால் ஏற்பட்டுவிடக் கூடிய சோர்வு இவைகள் நீங்குவதற்கு அருகம்புல் உதவுகிறது.

அருகம்புல் பயன்கள்:-

  • இந்த அருகம்புல்லினை எடுத்து வந்து அதனைச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து, அதன் ரசத்தினை தினமும் காலையில் பற்களைத் துலக்கிய உடன் 48 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உஷ்ணம் , பித்தம் தொடர்பான வியாதிகள் அறவே நீங்கிவிடும்.
  • இதன் சாறுடன் தண்ணீர், சர்க்கரை இவற்றினை விட்டுக் காய்ச்சி பிறகு ஆறவிட்டு சாப்பிட்டால் இதய நோய்க்கு மிகவும் நல்லது.
  • ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, கண் சம்பந்தமான நோய் நீங்குவதற்கு அறுகம்புல் சாறுடன் தண்ணீர் விட்டு காய்ச்சி பிறகு வடிகட்டி, டைமண்ட் கற்கண்டு கலந்து குடித்தால் மேற் கண்ட வியாதிகள் நீங்கிவிடும்.

அருகம்புல் பொடி பயன்கள்:-

  1. அருகம்புல்லை அரைத்து ஜூஸ் ஆக குடிக்கலாம்.சிலருக்கு நேரம் இல்லாதவர்கள் கடையில் அருகம்புல் பொடி கிடைக்கும். அருகம்புல் பொடி பல நன்மைகளை தருகிறது.
  2. அருகம்புல் பொடி தோல் வியாதி உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி சேர்த்து குடித்து வந்தால் தோல் பிரச்சனை தீரும்.
  3. இல்லையென்றால் கசாயம் போன்று காலையில் வெறும் வயிற்றில் கிடைக்கலாம்.
  4. அருகம்புல் பொடி ரத்தம் சுத்திகரிப்பு செய்யும்.
  5. சிலருக்கு உடல் குறைப்பதற்கு அருகம்புல் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அருகம்புல் சாறு தீமைகள்:-

  • சிலருக்கு அருகம்புல் ஜூஸ் குடித்தபிறகு தலைவலி ஏற்படும்.
  • சிலருக்கு நச்சுத்தன்மை குறைவாக இருந்தால் வாந்தி ஏற்பட வாய்ப்பு உளள்து.
  • தலை சுற்றுச்சு வரும்.
  • அருகம்புல் குடித்தால் பசி ஏற்படாது.
  • காய்ச்சல் ஏற்படும்.
Previous Post

பூவரசு மரம் பயன்

Next Post

Uses of Peach Fruit

Advertisement
Exit mobile version