தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதது, தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது ஆகியவற்றின் தொடர்பாக இதுவரை 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தவர்கள் மீது ஏப்ரல் 8 முதல் 11 வரை மாநிலம் முழுவதும் தமிழக போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறிவர்களிடம் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் காவல்துறை வசூல் செய்து உள்ளது.

ஏப்ரல் 8 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை மாஸ்க், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல் செய்துள்ளார்கள்.

சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம்          ரூ. 2.52 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காத்தவர்கள் இடம் ரூ.25 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8-ஆம் தேதி முதல் நேற்று வரை இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீஸரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக இடைவேளையை கடைபிடிக்காத, முகக்கவசம் அணியாதவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

See also  சென்னையில் அரசு வேலை எட்டாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்..!