தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக 2098முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. இதில் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 போட்டி தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

போஸ்ட் – Post Graduate Assistants /Physical Education Directors Grade-1

மொத்த காலியிடங்கள்

தமிழ் -268, ஆங்கிலம் -190, கணிதம் -110, இயற்பியல் -94, வேதியியல் -177, விலங்கியல் -160,தாவரவியல் -89,
பொருளாதாரவியல் -287, வணிகவியல் -310, வரலாறு -112, புவியியல் -12, அரசியல் அறிவியல் -16, வீட்டு அறிவியல் -3, இந்திய கலாசாரம் -3, உயிர் வேதியியல் -1, உயர்கல்வி இயக்குனர் (நிலை -1)-39, கணினி பயிற்றுவிப்பாளர்(நிலை -1)-39.

சம்பளம் -மாதம் ரூ.36,900 – 1.16,600

கல்வி தகுதி – பாடவாரியாக 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் B.ED முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு – அரசு தேர்வு வாரியம் வெளியிட அறிவிப்பின் படி ஜூலை 2021 ஆம் ஆண்டு 40 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் இடஒதுக்கீட்டின் பிரிவிற்கு கூட்டுதலாக 5 ஆண்டு கூடுதல் படுத்தப்பட்டது. இவர்கள் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம்– ரூ 500. SC /ST/SCA மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ரூ .250 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மட்டும் வாங்கிகளிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறைwww.trb.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள் 2021 ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களில் நடைபெறும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் கடைசி நாள் – 25.3.2021

மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.