சென்னை:

நேற்று தமிழக சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

  • நேற்று நடந்தா சட்டசபை தேர்தலி 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
  • இதில் சுமார் 72 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது . கடந்த தேர்லைவிட இது 3 சதவீதம் குறைவாகும்.
  • வழக்கமாக தேர்தல் மாலை 5 மணியுடன் முடிவடைந்து விடும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை நடைபெற்றது.
  • வாக்குப்பதிவு முடிவடைந்ததும் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டது .அதன் பின் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.
  • பின்னர் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது .
  • 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது இதை வாக்கு அடுத்த (மே) மாதம் 2-ந்தேதி எண்ணிக்கை நடைபெறும் .இன்னும் 24 நாட்கள் வரை வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
  • ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு மின்னணு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுளர்த்து . இங்கு கட்சி முகவர்களும் ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
  • ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் சுமார் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் உள்ளனர் . தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
  • “ஸ்ட்ராங் ரூம்” என்று அழைக்கப்படும் இந்த இடத்தி மின்னணு எந்திரங்கள் வைக்கப்படடுள்ளது. இந்த அறைகள் முன்பு துணை ராணுவ படையினர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டத்துயுள்ளார்
  • துணை ராணுவ படைக்கு அடுத்து தமிழ்நாடு சிறப்பு போலீசார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணியில் உள்ளனர். நுழைவு வாயில்களில் தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்கு அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. துணை ராணுவ படை, சிறப்பு போலீஸ் படை, உள்ளூர் காவல் துறையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
  • 75 வாக்கு எண்ணும் மையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் தினமும் கட்டுப்பாட்டு அறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறைகளில் இருந்து 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை அதிகாரிகள்கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவுயும்
  • மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு போலீசாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது . இதன் மூலம் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ளது யாரும் நெருங்காதபடி பாதுகாப்பு செய்யப்படும்.
  • வாக்கு எண்ணும் மையங்களில் கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் தங்குவதற்கும் இடம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது . அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இது போன்ற அடையாள அட்டைகள் இல்லாத கட்சியினர் யாரையும்அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
See also  கேதார்நாத் கோயில் பக்தர்களுக்காக மே 17 அன்று மீண்டும் திறக்கப்படுகிறது