இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9746 உள்ளது. இதில் நேற்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1636 ஆக உள்ளது.

சென்னையில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 633 ஆக பதிவாகியுள்ளது. தமிழக சுகாதார துறை மற்றும் குடும்ப நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் இன்றுவரை 1,90,11,118 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 80,634 மாதிரிகள் நேற்று அனுப்பப்பட்டது.

மாநிலத்தில் 259 கொரோனா சோதனை செய்யும் மையங்கள் உள்ளன, அவற்றில் 69 அரசு மற்றும் 190 தனியார் மையங்கள் உள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் புதிதாக 40 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. ஏற்கனவே 12 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது. இந்த 52 மாணவர்களும் ஒரே வகுப்பை சார்ந்தவர்கள் ஆகும். விடுதியில் இருந்த 6 மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மற்ற மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என்று கல்லாரியின் அதிகாரி கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனிமை படுத்துவதாக பெற்றோர்கள் உறுதியளித்துள்ளார். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கல்லூரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழக அரசு, அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிகளை மூடவும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தவும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

See also  சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்