இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 3.11 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனாவால் உறவினர்களையும் பெற்றோர்களையும் இழந்து மக்கள் பரிதவிப்பது நெஞ்சை பதற வைக்கிறது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனாவால் 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள் என்ற தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் முன்வந்து இருக்கிறது.

தற்போது அனைத்துக் குழந்தைகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் அவர்களது தேவைகள் ஆராயப்பட்டு, அவர்களது பாதுகாப்பும், நலமும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 577 குழந்தைகள் குறித்த தகவல்கள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. இதுபோல் பதிவாகாத தகவல்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் தகவல் கிடைத்துள்ள குழந்தைகளின் நலனை மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

See also  வேளாண்துறை அறிவிப்பு -விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்