இந்திய மக்களுக்கு ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணம் ஆகும். ரேஷன் கார்டு மூலம் அரசு தரப்பில் கொடுக்கப்படும் மலிவு விலையில் கொடுக்கப்படும் உணவு பொருட்களை வாங்க முடியும். தற்போது ரேஷன் கார்டு என்பதை ஸ்மார்ட் கார்டு என்று கூறுகிறோம். ஸ்மார்ட் கார்டு மூலம் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள், முகவரியை தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா லாக்டவுன் சமயத்தியில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க ரேஷன் கார்டுகள் மூலமாகப் அரசு தரப்பிலிருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. புதிதாக ஸ்மார்ட் கார்டு வாங்குவது என்பது சற்று கடினமான இருக்கிறது. வாங்குவதற்கு நீண்ட காலமும் ஆகிறது.

ரேஷன் கார்டு வாங்குபவர் அந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க https://tnpds.gov.in/ என்ற வலைப்பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ரேஷன் கார்டுகளில் இரண்டு வகைகள் உள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்காக தனி ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்காக தனியாக ஒரு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும் தகவல்களைக் நிரப்பும்போது மிகவும் சரியாகவும், கவனமாகவும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும். ரேஷன் கார்டு விண்ணப்பிக்க குடும்ப தலைவருடைய புகைப்படம் தேவைப்படுகிறது.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பணியாளர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.

See also  மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்திய பெங்களூரு அணி