லாம்ப்டா மிக மோசமான வைரஸ் WHO எச்சரிக்கை.!

- Advertisement -

தென் அமெரிக்க நாடான பெருவில் ஜூன் 14 ஆம் தேதி லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வகை வைரஸுகளில் ஒன்றான லாம்ப்டா மிக மோசமான வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல கோடி மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வெவ்வேறு வகையில் மாற்றம் அடைந்து வருகிறது. மாற்றமடைந்து வரும் கொரோனா வகை வைரஸை ஆல்பா, பீட்டா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டா மாற்றமடைந்து டெல்டா ப்ளஸாக மாறியது. உலக முழுவதும் டெல்டா ப்ளஸ் ஆபத்திற்குரியதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பெருவில் கண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வேரியண்டானது டெல்டா ப்ளஸை விட வீரியமிக்கது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். லாம்ப்டா வகை வைரஸ் மிகக் குறுகிய நாட்களிலேயே கிட்டத்தட்ட 25 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த வகை வைரஸானது மிகவும் வீரியமிக்கதாகவும், அதிவேகத்தில் பரவ கூடியதாகவும் பல்வேறு நாடுகளில் கொரோனா மூன்றாம் அலைக்கு இது முக்கிய காரணமாக இருக்கும் என்றும் தெரிகிறது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox