கொரோனா வைரஸ் பரவலால் மாநிலம் முழுவதும் பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. இதனால் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை தொடரமுடியாமல் பலரும் பல இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்தநிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் ஜியோ நிறுவனம் ஒரு அறிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா பேரிடர் காலத்தில் ஜியோ சிம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி.

கொரோனா பேரிடர் காலம் முழுவதும் ஜியோ பயனாளர்கள் ஒரு நாளுக்கு 10 நிமிடம் இலவச அழைப்புகள் என்று மாதத்துக்கு 300 நிமிடம் வழங்கப்படவுள்ளது.

ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் பவுண்டேஷன் உடன் சேர்ந்து இந்த சலுகையை அறிவித்துள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பித்துள்ளதால் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது.

See also  தமிழகத்தில் இன்றிலிருந்து இரவு நேர ஊரடங்கு-கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்