ஆர். பார்த்திபன் இயக்கி , நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் விமர்சனங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் மத்திய அரசு இந்த படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை அறிவித்தது.
இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் ‘இரவில் நிழல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்படத்தில் பார்த்திபனே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாக வில்லை.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.
அப்போது பார்த்திபன் இயக்கும் ‘இரவின் நிழல்’ படத்திற்கு இசையமைக்கும் தகவலை அவர் அங்கே உறுதி செய்தார்.
இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது” என்று திருக்குறளில் ஏ.ஆர். ரஹ்மானை பெயரை வைத்து மாற்றி பதிவு செய்து இருக்கிறார்.
தற்போது இரவின் நிழல் படத்துக்கு 3 பாடல்கள் தயாராகி இருக்கிறதாம். இந்த படத்தை மிகவும் புதுமையான அனுபவத்துடன் உருவாக்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்