விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 திரைப்படத்தை இளம் இயக்குனரான நெல்சன் தீலிப்குமார் இயக்கவுள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது 65 படம் கையெழுத்திட்டத்தை அறிந்த ரசிகர்கள் ட்ரைலர்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சன் பிக்ச்சர்ஸ் அலுவலகத்தில் சமீபத்தில் தளபதி 65 கான பட பூஜை சிறப்பாக நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து சென்னையில் இரண்டு நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவைடைத்த தொடர்ந்து தளபதி 65 படகுழிவினார்கள் சென்னைக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களியில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தளபதின் 65 படத்தை எடுக்க கையெழுத்திட்டுள்ளார். விஜய் நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் மிஷ்கினின் முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு கதாநாயகி இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் ராஷ்மிகா மந்தனா என்ற தகவல் சமூக வளையதலைகளில் உலா வருகின்றன.

படத்தில் மற்ற நடிகை நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வந்த நிலையில், ‘தளபதி 65’ யில் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது.

‘தளபதி 65’ பூஜையின் அடுத்த கட்டமாக, இரண்டு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. படக்குழுவினர் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தளத்தை இயக்குனர் நெல்சனும் ரஷ்யாவில் தீவிர படப்பிடிப்புத்தள வேட்டையில் இறங்கியிருந்தார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்ததையொட்டி நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

See also  பெண்கள் சிவப்பு இறைச்சி பயன்படுத்தகூடாது ....

Categorized in: