நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைக்கவுள்ளார், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இப்படத்தை  மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டத்துடன்  தயாராக உள்ளது.
இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இன்று நடிகை பூஜா ஹெக்டே, “வேறு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளதால், தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை” என இணையத்தளத்தில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று பூஜை போடப்பட்டு இருந்தாலும் , படப்பிடிப்பு தமிழகதில் தேர்தல் முடிந்த பிறகே தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில்,பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகருமான கவின் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக  தகவல் வைரலாகி வருகிறது.
விஜய் தளபதி 65  பட பூஜையில் கிரே கலரிலான சிலுக்கு சட்டை அணிந்து  இருந்தார்  என தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி பிரபலங்கள்

கோலமாவு கோகிகலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த நெல்சன். அந்த திரைபடத்தில் விஜய் டிவியில் மொரட்டு சிங்கிள் என்னும் ரியாலிட்டி  நிகழ்ச்சியிலும் மற்றும் சின்னத்திரை  நடிகருமான ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா போன்ற  பிரபலங்கள் நடித்து இருந்தனர்.
பிக் பாஸ் அர்ச்சனா, குக் வித் கோமாளி தீபா சங்கர் உள்ளிட்டோர்  சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்தனர். கவின்  தளபதி 65 படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வைரலாக வெளியாகி உள்ளன.
See also  சமூக வலைதளங்களில் வெளியாகிய மண்டேலா படத்தின் டீசர்

Categorized in: