Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவிநாசி (தனி)சட்டமன்ற தொகுதியில் தற்போது அதிமுக மூத்த தலைவரும், சட்டமன்றத்தின் சபாநாயகருமான பி.தனபால் போட்டியிடுகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். இதனால் மீண்டும் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

அவிநாசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் ஆர்.அதியமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் ஏ.வெங்கடேஸ்வரன், அமமுக சார்பில் எஸ்.மீரா, நாம் தமிழர் சார்பில் ஷோபா உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

அவிநாசி தொகுதி அன்னூர் ஒன்றியத்தில் உள்ள பசூரில் அதிமுக வேட்பாளர் தனபால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியை சேர்த்த மக்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு குறைகளை எடுத்துரைத்தனர்.

பல ஆண்டுகளாக எங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கைவைத்து வருகிறோம். ஆனால் இன்னும் நிறைவேறவில்லை. கூட்டுறவு சங்கத்தில் கேட்டால் சொத்து ஜாமீன் வேண்டும் என்று அலைக் கழிக்கிறார்கள். எங்கள் பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்க்க பலமுறை கோரிக்கை வைத்து உள்ளோம். ஆனால் தமிழக அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேஷன் கார்டு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் புகார்களை வைத்து உள்ளனர்.

இதற்கு அதிமுக வேட்பாளர் தனபால் அன்னூர் சேர்மேனை கவனிக்கச் சொல்கிறேன் என்று சமாளித்தார். தொடர்ந்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு ஒரு தீர்வை சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து தனது பிரச்சாரத்தை சுருக்கமாக முடித்து கொண்டு பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். எந்த புகார்கள் குறித்து ஊராட்சி தலைவரிடம் பொதுமக்களின் குறைகள் பற்றி விசாரிக்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். அடுத்த முறை பிரச்சாரத்தை முறையாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவம் கொண்டு அதிமுக வேட்பாளர் தனபால் வேறு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

Share: