Dark Mode Light Mode

டாஸ்மாக் கடைகளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை

ஹைலைட்ஸ் :

  • இன்று முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு.
  • சென்னையில் மட்டும் அதிகபட்சமாக ரூ.100 கோடியே 43 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை.
  • டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி இன்றி கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு இன்று முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்த இருந்த நிலையில் சனி மற்றும் ஞாயற்றுக்கிழமைகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டு தினங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்கள் மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.426 கோடியே 24 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் மட்டுமே ரூ.100 கோடியே 43 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் ரூ.87 கோடியே 28 லட்சத்துக்கும், திருச்சியில் ரூ.82 கோடியே 59 லட்சத்துக்கும், சேலத்தில் ரூ.79 கோடியே 82 லட்சத்துக்கும், கோவையில் ரூ.76 கோடியே 12 லட்சத்துக்கும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

சனிக்கிழமைகளில் விற்பனையை ஆனதை போலவே நேற்றும் மதுபான கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று முட்டை முட்டையாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

Previous Post

குழந்தைகளை தாக்கும் மூன்றாம் அலை கொரோனா

Next Post

கொரோனா நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

Advertisement
Exit mobile version