இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த முயற்ச்சித்து வந்த அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செய்து வந்த நிலையில் கடத்த வருடம் வர்த்தகத்தில் சாதனை படைத்தது வருகிறது.
இந்நிறுவனத்தின் முக்கிய இலக்காக உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுசெல்வதும் சர்வதேச சந்தைக்கு இந்திய வர்த்தகத்தை கொண்டுசெல்வதும் முக்கியநோக்கமாக வைத்துள்ளது. கடத்த சில ஆண்டுகளாக இதற்காக  பல மில்லியன் டாலர்களை செலவு செய்து வருகிறது.
அமேசான் 2020 மிக பெரிய அளவிலான வளர்ச்சியை தனது இலக்கில் அடைந்துள்ளது. 2020 வர்த்தக சந்தையானது கொரோன பாதிப்பால் நிலை தடுமாறிய பலருக்கும் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் வர்த்தக தளங்களில் வேலைவாய்ப்பினை அளித்தது. இந்தியா வர்த்தகமானது வெளிநாட்டு வர்த்தக திட்டத்தில் மிக அதிக அளவு நன்மையை அடைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகது.
சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய தயாரிப்புகள், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த பிரிவுகள் மூலம்  இந்தியாவில் சுமார் 3 லட்சம் வேலைவாய்ப்புகளை அமேசான் அள்ளிக்கொடுத்துள்ளது.
உலக நாடுகளுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை 2025 ஆண்டிற்குள் இந்தியாவானத்து கொண்டுசெல்லவும்,10 லட்சம் வேலைவாய்ப்புகளை இதன் மூலம் உருவாகும் இலக்கை அமேசான் தலைவர் ஜெய் பைசோஸ் ஜனவரி 2020 ல் தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி  செய்ய தகுதி பெற்றாலும்,1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதேபோல் சுமார் 25 மில்லியன் சிறு விளியாபாரிகளை டிஜிட்டல் திறன் கொண்ட வியாபாரிகளாக மாற்றி அமேசான் ஈகாமர்ஸ்  தளத்திற்கு கொண்டுசேர்த்துள்ளோம் என அமேசான் இந்தியாவின் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்துள்ளார். 2025 க்குள் ஏதன் எண்ணிக்கை 1 கோடியாக உயரும் என தெறிவித்துள்ளார்.
See also  தமிழக வாக்கெடுப்புக்கு இரண்டு கட்சிகளுடன் இருக்கை பகிர்வு ஒப்பந்தத்தில் திமுக கையெழுத்திட்டது