அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தேர்வு தேதிகளை ஆசிரியா் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு பணி சாா்ந்து ஆசிரியா் தேர்வு வாரியம் அறிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  அதில் இணையவழி மூலமாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரா்கள் கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது . மேலும், விண்ணப்பதாரா் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 2-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கபட்டிருந்தது. மேலும் அதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தற்போது அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வா்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தேதிகள் கொரோனா பெருந்தொற்றுச் சூழல், தேர்வு மையங்களின் தயாா் நிலை மற்றும் நிா்வாக வசதியைப் பொருத்து மாறுதலுக்கு உட்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Government Polytechnic College Lecturer Exam date