அனுராக் தாகூர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று கூறினார். இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அனுராக் தாகூர் கேட்டுக்கொண்டார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே, அனுராக் தாகூர் அவருக்கு அவரது அறையில் வரவேற்பு அளித்தார். பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் பிரசார் பாரதியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அனைத்து ஊடகங்களின் தலைவர்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.