தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தற்போது கால்நடை மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து வெளியான அறிவிப்பில் B.V.Sc மற்றும் B.Tech ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மாணவர்களின் விண்ணப்பங்கள்‌ இணையதளத்தில் மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும். அதனால் மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்லூரிகளின் தகவல்‌ தொகுப்பேடு, சேர்க்கைத்‌ தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றம்‌ இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும்‌ www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில்‌ காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Veterinary

See also  கருப்பு பூஞ்சை தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - தமிழக அரசு