சுகன்தீப் சிங் பேடி

மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – ககன்தீப்சிங் பேடி அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 115 மருத்துவர்கள், 189 செவிலியர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

இது குறித்து தலைமை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 115 மருத்துவர்கள், 189 செவிலியர் பணி அமர்த்தப்பட்ட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இன்று(புதன்கிழமை) இரவு 8 மணிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மருத்துவர்களுக்கான மாத வருமானம் ரூ. 60000, செவிலியர்களுக்கு மாதம் ரூ.15000 மற்றும் 6 மாதத்திற்கு ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மருத்துவர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

செவிலியர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மருத்துவர்கள் 94983 46492 என்ற எண்ணிலும், செவிலியா்கள் 94983 46493 என்ற செல்லிடப்பேசி எண்ணின் மூலம் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பித்தவா்கள் மே 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெறும் நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தவறியவர்கள் உரிய சான்றிதழ்கள் உடன் நேரடியாக கலந்து கொள்ளலாம். இந்தப் பதவியானது தற்காலிகமானது பணி நிரந்தரம் இல்லை. இந்த பணியில் சேருபவர்கள் சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டவா்கள் மே 28 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பணியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவா - சத்யபிரதா சாகு