அத்திக்காய் பயன்கள் அத்தி மரத்திலிருந்து கிடைக்கும் காயே அத்திக் காய் எனப்படும். அத்திக்காய் சிறுவர்கள் விளையாடும் கண்ணாடிக் கோலிக்குண்டு அளவில் உருண்டையாக இருக்கும். இந்தக் காய் பச்சை நிறமாக இருக்கும். இந்தக் காயின் மேல் நுண்ணிய சுனைகள் இருக்கும்.

 • ”அத்திக் காயை உடைத்துப் பார்த்தால் அத்தனையும் பூச்சி” என்பது ஒரு பழமொழி. ஆனால், அத்திக்காயை உடைத்துப் பார்த்தால் அதனுள் நடுமையத்தில் விதைகளும், காயின் சதைப்பற்றுக் கனத்தும் காணப்படும்.
 • இந்த விதைகளுடன் ஒன்றிரன் ரண்டு, அல்லது பல சின்னஞ்சிறு கொசுக்கள் மயங்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். இவைகளின் மேல் வெளிக்காற்றுப் பட்டவுடன், இந்தக் கொசுக்கள் மயக்கம் தெளிந்து பறந்து போவதைக் காணலாம். அத்திக்காயினுள் கொசு எப்படி வந்தது? இது ஒரு ஆச்சரியமேயாகும்.
 • அத்திக்காய் அத்திக்காய் மருத்துவக் குணங்கள் நிறைந்த மகத்தானக் காயாகும். இதனை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ணலாம் athikai benefits in tamil அத்திக்காய் பயன்கள்
 • அத்தி மரம் புஷ்ப்பித்த உடனேயே, இதழ்கள் மூடிக்கொண்டு பிஞ்சுகளாகி விடும்.
 • அத்திப்பூவின் அருகிலிருந்த கொசுக்கள் பூவில் தேன் குடிக்க அதன் மேல் உட்காரும் சமயம் இதழ்கள் மூடி பிஞ்சாக மாறிவிடும் காரணத்தினால் இந்தக் கொசுக்கள் இந்தக் காயினுள் சிக்கிக்கொள்கின்றன.

அத்திக்காய் பயன்கள்:-

மலச்சிக்கல் நீங்க:

 • மனிதனுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டாலே அது பல வியாதிகளைத் தோற்றுவிக்க முதற்படியாகும். மலச்சிக்கலினால் தலைவலி, வயிற்றுவலி, நெஞ்சுவலி, வயிற்று உப்பிசம், பசியின்மை, மயக்கம், கிறுகிறுப்பு, காய்ச்சல் இவைகள் உண்டாகும்.
 • மனிதனுக்கு மூலரோகம் உண்டாக முதற்காரணமாக இருப்பது மலச்சிக்கலே ஆகும். மலச்சிக்கல் காரணமாக கண் பார்வை கூட மங்கலாகும்
 • எனவே மலச்சிக்கலைப் போக்கி மலத்தை இளகலாக இறங்க வழித் தேடிக் கொள்ள வேண்டும். இதற்கு அத்திக்காய் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது.
 • அத்திக்காயைக் கொண்டு வந்து அதை நான்கு துண்டுகளாக நறுக்கி, நடுவிலுள்ள விதை, கொசு இவைகளை எடுத்துவிட்டு, அத்துடன் துவரம்பருப்பு, அல்லது பாசிப்பருப்புச் சேர்த்து கூட்டு வைத்து ஐந்து நாள் தினசரி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும் athikai benefits in tamil அத்திக்காய் பயன்கள்.

உடலில் உஷ்ணம் தணிய:

 • சிலருடைய உடலில் எப்பொழுதும் அதிகச் சூடு இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால், இது காய்ச்சலாக இருக்காது.
 • இதைத் தேகக்காங்கை என்று சொல்லுவார்கள், இப்படிப்பட்டவர்கள் மேலே சொல்லியபடி அத்திக் காயைச் சமைத்து ஒருவாரம் வரை தொடர்ந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து சமநிலையில் நிற்கும்.

சீதபேதிக்கு:

 • சீதபேதி என்னும் வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டிருக்கும் சமயம், அதற்கு எந்த மருந்துச் சாப்பிட்டு வந்தாலும், அந்த சமயம் அத்திப் பிஞ்சியைக் கொண்டு வந்து, நறுக்கிச் சுத்தம் பார்த்து அத்துடன் உப்புச் சேர்த்து, காரம் சேர்க்காமல் நெய்யில் வறுத்து தினசரி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் சீதபேதி சீக்கிரமே குணமாகும்.
 • சீதபேதியினால் கஷ்டப்படுகிறவர்கள் அத்திக்காயை காரம் இல்லாமல் சமைத்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும் அத்திக்காய் பயன்கள்.

நெல்லிக்காய் பயன்கள்:

சூலை நோய்க்கு:

 • சூலைப்பிடிப்பினால் கஷ்டப்படுகிறவர்கள் அத்திக் காயை சமைத்து சாதத்துடன் சேர்த்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சூலைப் பிடிப்பு நீங்கிவிடும்.

இரணம் ஆற:

 • உடலில் எங்காவது இரணம் இருந்து அதற்கேற்ற சிகிச்சையளித்து வரும் சமயம் இந்த அத்திக்காயையும் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இரணம் சீக்கிரமாக ஆறிவிடும்.

வாத நோய் தணிய:

 • வாத நோயினால் கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாக அத்திக்காயை உணவுடன் சேர்த்து வந்தால் வாத சம்பந்தமான நோய் தணிந்து விடும்.

இரத்த மூலம் குணமாக:

 • சிலருக்கு இரத்த மூலம் ஏற்பட்டு மலம் கழிக்கும் பொழுதெல்லாம் இரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கும். சிலசமயம் அதிக அளவிலும் இரத்தம் கொட்டும்.
 • இதை நீடிக்க விட்டால், உடலிலுள்ள இரத்தம் குறையக் குறைய உடல் பலம் குன்றும்; உடல் வெளுக்கும். நாளாவட்டத்தில் அபாயத்தை விளைவிக்கும்.

கிராணிக் குணமாக:

 • கிராணி என்னும் வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் அத்திப் பிஞ்சு கொண்டு வந்து சமைத்துச் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் கிராணிக் கழிச்சல் குணமாகும்.

வெள்ளைப்படுதல்:

 • அத்திக்காயை யை உணவில் சேர்த்து உண்பதினால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் போன்றவற்றை குணமாக்குகிறது.

புண்:

 • குடல் புண், வாய்ப்புண் உள்ளவர்களுக்கும் இதனை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டால் குடல் புண் நலமாகும்.

இரத்த சோகை குணமடைய

 • இரத்தசோகை நோய்களை குணமாக்குவதிலும், இரத்தத்தை சுத்தம் செய்வதிலும் அத்திக்காய் சிறந்ததாகும்.

உஷ்ணம் குறைய:

 • உஷ்ணத்தினால் உடலில் உண்டாகும் நோய் களுக்கு அத்திப் பிஞ்சுக்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பும் லேசான காரமும் சேர்த்து நெய்யில் வறுத்துச் சாப்பிட்டால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகிவிடும்.

மூலம் நோய்:

 • மூலம் நோய் கண்ட சிலருக்கு இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும். இவர்கல் சமையலில் பச்சை மிளகாய்ச் சேர்க்காமல் இந்தக் காயை சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.

குழந்தைகளுக்கு:

 • சில குழந்தைகளுக்கு மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும். இது போன்ற குழந்தைகளுக்கு இதனை சாதத்துடன் பிசைந்து அடிக்கடி கொடுத்து வந்தால் இரத்தம் கொட்டுவது நின்றுவிடும்.

மாதவிலக்கு:

 • பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை களுக்கு இதனை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அளிக்கும் athikai benefits in tamil அத்திக்காய் பயன்கள்.
 • அத்தி அத்திக் காய் தமிழகத்தில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் காயாகும். அத்திக்காய் பூக்காமலேயே காய்க்கக் கூடியதாகும். இது மரவகையைச் சார்ந்தது.
 • இதில் நாட்டு அத்தி, சீமை அத்தி என இருவகையுண்டு. நாட்டு அத்தியின் இலை சிறியதாக இருக்கம். சீமை அத்தியின் இலை பெரியதாக இருக்கும்.
 • இரண்டு வகையாக இருந்தாலும் இதன் பலன் ஒன்றுதான். அத்திக் காயை சமையலில் பயன்படுத்திக்கொண்டால் நோயற்று வாழலாம்.
 • அத்திப் பிஞ்சினை துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இவைகளில் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
 • அத்திக்காயை வேகவைத்து நன்றாய் அரைத்து அதில் உப்பு, கடுகு, பெருங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்துத் தயிர் சேர்த்துக் கலக்கிப் பச்சடியாவும் சாப்பிடலாம்.
 • அத்திக்காயை வேக வைத்து நன்றாக நாக்கி அரைத்து அதனுடன் வறுத்தக் கடலைப் பருப்பு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி இவைகளைச் சேர்த்து அரைத்து நெய்யில் வடையாகச் சுட்டுச் சாப்பிடலாம்.
 • இது போன்று பொரியல், வறுவல் செய்தும் சாப்பிடலாம். இது போன்று சமையலின் வாயிலாக நமது உடலுக்கு மோட்டத்தை அளித்து நோயில்லாது வாழவைக்கும் ஆற்றல் உள்ளது அத்திக்காயாகும்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

 • நாட்டு அத்திப் பழத்தைக் கொண்டு வந்து நீர்விட்டு அரைத்து வடிகட்டி, குழம்பான பதத்தில் கல் சுண்ணாம்பு நீர் சிறிதளவு சேர்த்து அப்படியே 12 மணி நேரம் வைத்துவிடவும்.
 • அதன் பின்னர் பார்த்தால் அது அல்வா போன்று ஆகிவிடும். அதனை எடுத்து கத்தியினால் துண்டுகளாக்கி சர்க்கரையில் தொட்டுச் சாப்பிடவும்.
 • இதனால் குடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் போதல், உடல் உஷ்ணம், பெரும்பாடு ஆகிய வியாதிகள் குணமாகும்.

வயதானவர்களுக்கு அத்திப்பழம்:

 • வயதாகிவிட்டால் உடலில் தெம்பில்லாமல் சோர்வாக இருக்கும். இவர்களுக்கு அத்திப்பழம் ஒருடானிக்காக இருந்து போஷாக்கு அளிக்கிறது.
 • இரவில் அத்திப் பழத்தை ஒரு டம்ளர் சுத்தமாக நீரில் ஊறவைத்து காலையில் பார்த்தால் மெத்துமெத்து என்று மிருதுவாக இருக்கும்.
 • காலையில் இந்தப் பழத்தைத் தின்று அந்நீரைக் குடித்து வந்தால் வயதானவர்கள் வாலிபர்களைப் போன்று மிடுக்குடன் இருக்கச் செய்யும்.

நீரிழிவு நோய்க்கு அத்திவிதை:

 • நீரிழிவு நோயாளிகள் அத்திப் பழத்தின் விதைகளைத் தனியாக எடுத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியிலிருந்து சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும் athikai benefits in tamil அத்திக்காய் பயன்கள்.
 • அத்திக்காய் மருத்துவக் குணங்கள் நிறைந்த மகத்தானக் காயாகும். இதனைப் பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ணலாம். அத்திக்காயை உணவில் சேர்த்து உண்பதினால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களை நீக்கி குணமாக்குகிறது.
 • சீதபேதியினால் கஷ்டப்படுகிறவர்கள் அத்திக்காயை காரம் இல்லாமல் சமைத்துச் சாப்பிட்டால் சீதபேதிகுணமாகும்.
 • குடல்புண், வாய்ப்புண் உள்ளவர்களும் இதனை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் புண்கள் குணமாகும்.
 • இரத்த சோகை நோய்களைக் குணமாக்குவதிலும், இரத்தத்தைச் சுத்தம் செய்வதிலும் அத்திக்காய் சிறந்ததாகும்.
 • உஷ்ணத்தினால் உடலில் உண்டாகும் நோய்களுக்கு அத்திப் பிஞ்சுகளைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பும், லேசான காரமும் சேர்த்து நெய்யில் வறுத்துச் சாப்பிட்டால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகிவிடும்.
 • மூல நோய் கண்ட சிலருக்கு இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும், இவர்கள் சமையலில் பச்சை மிளகாய்ச் சேர்க்காமல் இந்தக் காயை சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
 • சில குழந்தைகளுக்கு மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும். இது போன்ற குழந்தைகளுக்கு இதனைச் சாதத்துடன் பிசைந்து அடிக்கடிக் கொடுத்துவந்தால் இரத்தம் கொட்டுவது நின்றுவிடும்.
 • பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்சனைகளுக்கு இதனை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அளிக்கும்.