ஆவாரம் பூ என்றாலே அது நம் கடவுள் படைக்கும் பூவாக தான் நாம் பார்த்திருப்போம். பெண்கள் அதை விரும்பி தலையில் சூடுவது இல்லை.
இயற்கையாகவே நாம் இதை பூவ கண்டாலும் இது ஒரு மூலிகை மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த அருமருந்து பயன்களை இப்போது நாம் பார்ப்போம்.

கூந்தலை நன்கு வளர

ஆவாரம்பூ 100 கிராம் வெந்தயம் 100 கிராம் பயத்தம் பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும் இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர கூந்தல் கருகருவென்று வளரும்.
ஆவாரம் பூவின் பட்டை வேர் இலை அனைத்தையும் நோய் எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தந்து ஆரோக்கியமாய் வைத்திருக்கும்.

காய்ச்சலை குணப்படுத்த ஆவாரம் பூ

உடலில் காய்ச்சல் ஏற்படும் ஏதாவது ஒன்று நுண்ணுயிரி தொற்றுகளின் மூலமே வருகிறது நம் உடலில் எப்படிப்பட்ட காய்ச்சல் இருந்தாலும் ஆவாரம் பூவை போட்டு வேக வைத்து நீர் அந்த நீரை காய்ச்சல் நேரங்களில் குடித்து வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் காய்ச்சல் குணமாகும்.

முடி உதிர்வு பிரச்சினைக்கு:

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்ற உஷ்ணம் நம்மை தாக்காது.

கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ தவிக்கிறது.

எனவே முடி உதிர்வு பிரச்சினை இருந்தால் கூந்தலை ஆரம்ப வைத்துக் கொண்டு உடல் உஷ்ணத்தால் ஏற்படும் முடி உதிர பிரச்சினைகளை சரிசெய்யும்.

கூந்தல் நன்கு வளர

ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்திப் பூ,தேங்காய்ப்பால் ஒரு கப் எடுத்துக் கொண்டு வாரம் ஒருமுறை அரைத்து தலைக்கு ஊழல் குளித்தால் உடல் குளிர்ச்சியாகி முடி கொட்டுவது உதிர்வது நின்று கூந்தல் வளர தொடங்கும்.

உஷ்ணத்தினால் ஏற்படும் கண் நோய்களுக்கு ஆவாரம்பூ

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்ணில் புத்தி எடுத்து வந்தால் சூட்டினால் ஏற்படும் கண் நோய் அனைத்தும் குணமாகும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

மூலம் குணமாக

ஆவாரம் பட்டை, ஆவாரைப் பூ கொழுந்து, வேர் இவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் மூலம் குணமாகும்..

உடல் வலிமை பெற

ஆவாரம் பூ பட்டை, பனங்கல்கண்டு , வால்மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி அதில் பால் கலந்து குடித்து வர உடலில் வலிமை பெறும் சர்க்கரை நோய் கட்டுக்குள் அடங்கும்.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க ஆவாரம்பூ

அசோக மட்டை, மருதம்பட்டை, ஆவாரம்பூ, திரிகடுக பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடிசெய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியானது சரியாகிவிடும்.

ஆவாரம்பூ உடலுக்கு அளிக்கும் அற்புதமான நன்மைகள்

ஆவாரம் பூக்களுடன் பருப்பு வெங்காயம் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலம் கூட்டும் தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊறவைத்து அந்த தண்ணீரை குடியுங்கள் அது தாகம் போக்கும்,சிறுநீரை பெருக்கும் உடல் துர்நாற்றத்தை துரத்தும்.