தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி(Kalvi Television) மூலம் வகுப்பு வாரியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வருகிறார்கள். அவ்வாறு அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வித் தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துகிறார்களா என்றும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் வீட்டிற்கு சென்று கண்காணிக்க வேண்டும். மேலும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார்.

See also  ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் தொடக்கம்