ஹைலைட்ஸ் :

  • அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10.00 வரை செயல்பட அனுமதி
  • வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் செய்யப்பட அனுமதி
  • மே 17 ஆம் தேதி முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும்

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10.00 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 335 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17,670 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அதிகரித்து கொண்டு வருவதால் அனைத்து இந்திய வங்கி அலுவலர்கள் அசோசியேசன்ஸ் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் வங்கிகள் செல்யப்படும் நேரத்தை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை மாற்ற தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் செய்யப்பட அனுமதி வழங்க வேண்டும் என்றும், அத்தியாவசிய சேவைகளான வைப்பு, பணம் அனுப்புதல் மற்றும் அரசு வணிகம் தொடர்பான பணிகள் மட்டுமே செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை இருந்த நிலையில் மே 17 ஆம் தேதி முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.