வெங்காயம் அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.  வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதில் சிலவற்றை பார்ப்போம்.

வெங்காயத்தில் வைட்டமின் சி, பி 12, எ, கே மற்றும் தையமின் உள்ளது.  இதை தவிர காப்பர், பாஸ்பரஸ், மக்னிசீயம், பொட்டாசியம், குரோமியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன.

பச்சை வெங்காயத்தில் வைட்டமின் சி மிகவும் அதிகமாக இருக்கும்.  பச்சை வெங்காயத்தில் உள்ள கந்தக சத்து ஒரு சிலருக்கு ஒத்துவராது. அவர்கள் இதை வேகவைத்து சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகுவதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும்.

சின்ன வெங்காயம் சாப்பிட்டுவந்தால் மாரடைப்பு நோயாளிகளுக்கும்  மற்றும் ரத்த நாள கொழுப்பு உள்ளவர்களுக்கும்  நல்ல தீர்வு  கிடைக்கும்.

வெங்காயத்தை துண்டுத்துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி  சாப்பிட்டால் மலசிக்கல் குணமாகும்.  நெய் இட்டு வதக்கி சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரும்பல் குணமாகும்.

வெங்காயத்தை தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி,மூளை பலமும் பெரும். வெங்காயசாறு  மோருடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கி இருமல் குணமாகும்.

மேலும் வெங்காயச்சாற்றை முகப்பரு, கட்டிகள் மீது தடவி வர விரைவில் நிவாரணம் தரும்.  இந்த சாற்றை தேள் போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில்  தடவினால் வலிகுறையும்.

வெங்காயத்தில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை குறைக்கிறது.

See also  12 மாநில முதல்வர்களுடன் மோடி இன்று கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை பற்றி ஆலோசிக்க உள்ளார்.