நாம் சாப்பிடும் உணவானது ஜீரணிக்கப்பட்டு வெளியேறாவிட்டால் பல பிரச்சனை வர ஆரம்பிக்கும். மிகவும் கஷ்டப்பட்டு மலம் கழிக்க முயற்சிக்கும்போது மலவாயில் சிறு புண்களும் தோன்றும்.
இதே நிலை நீடித்தால் மலம் கழிக்க சிரமம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் ஆசனவாயின் உட்புறத்திலோ  அல்லது வெளிப்புறத்திலோ சிறுசிறுகட்டிகள்  தோன்றும்.  அல்லது வீக்கம் ஏற்பட்டு அதுவே மூல நோயாக மாறும்.

தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள், உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், வாயுவை ஏற்படுத்தும் உணவு பொருட்களை உண்பவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்நோய்க்கு உள்ளாகிறார்கள்.

மூலநோய் பரம்பரையாக வர வாய்ப்புள்ளது.  இவர்களுக்கு ஆரம்ப அறிகுறி தெரியாமல் நோய் அதிகரித்த பிறகே பல வித பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பயறு வகைகள், கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிச உணவுகள், பூண்டு ஆகியவற்றை தவிப்பது நல்லது.  மேலும் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்தல், அதிக எடை தூக்குதல் மற்றும் வாகன பயணம் செய்தல் ஆகியவற்றையும்  தவிர்க்க வேண்டும் .

துவரை வேரில் பெனின், அலனின், ஐசோபுளோவோன், ஸ்ட்டிரால், ட்ரிடெர்பினாயிடு,ஆன்த்ரோகுயின், ஐசோபுளோவின் மற்றும் கஜானால் போன்ற வேதி பொருட்கள் அடங்கி உள்ளது.

துவரையின் பட்டையை உரித்து நிழலில் காயா வைத்து  பொடி  செய்து 1 முதல் 2 கிராம் அளவிற்கு எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் பகுதியில் ஏற்பட்ட சதை வளர்ச்சி, வீக்கம் நீங்கிவிடும்.

துவரையின் வேரை வைத்து மருந்து செய்ய முடியாதவர்கள் ஆயுர்வேத மாத்திரையான கன்கனியாதிவடி யை காலை, இரவு என 2 வேலை சாப்பிட்டு வர இந்நோய் குணமாகும்.