• உலகிலேயே அதிக விலை உயர்ந்த காய்கறி வகையில் ஒன்றை பிஹார் விவசாயி ஒருவர் உற்பத்தி செய்து அசத்தியுள்ளார்.
  • பிஹார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், கராம்நித் கிராமத்தில் அம்ரேஷ் சிங் வயது (38) என்பவர் வசித்து வருகிறார்.
  • விவசாயி ஆன இவர், வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறி வகையின் விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளார். யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
  • தற்போது அவர் உற்பத்தி செய்யும் ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறியின் விலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.
  • இந்த வகை பயிரின் அனைத்து பாகங்களும் பயன் உள்ளதாக இருக்கிறது என கூறப்படுகிறது. இது கனாபசீ குடும்ப வகையைச் சார்ந்தது.
  • மேலும் இதில் இருக்கும் தண்டு, மலர், காய் மற்றும் கனி ஆகிய அனைத்து பொருட்களும் பயனுள்ளதாக இருப்பதால் இத்தகைய முக்கியத்தும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
  • மேலும் இது பீர் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • காசநோய்க்கு இது இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. கூடவே தோல் பளபளப்பு தருவதாகவும், கவலை, சோர்வு, இன்சோம்னியா, மன அழுத்தம் போன்றவற்றிக்கு நல்ல மருந்தாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
  • இது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு கூறும்போது, “கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்கும் ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறி, இந்திய விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்” என்கிறார்.
  • இப்போது இந்தியாவில் இந்த காய்கறி தேவையின் அடிப்படையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ஆனாலும் அதிக வருமானம் தரும் ஹாப் ஷூட்ஸ் விவசாயிகளுக்கு நம்பிக்கை தருவதாக கூறிப்பிடபடுகிறது.
See also  நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு - மத்திய அரசு