பணி நாட்களில் அனைத்து ஊழியர்களும் தவறாமல் வேலைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

தலைநகர் டெல்லியில், கொரோனா தொற்று பரவல் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருகிற நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இருப்பினும், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பணிக்கு நேரடியாக வருவதிலிருந்து விலக்களிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் விவரம்

தற்போது வரை உதவிச் செயலாளர்கள் வேலையில் இருப்போர்தான் தவறாமல் அலுவலகம் வரும் நடைமுறை இருந்தது. உதவிச் செயலர்கள் வேலையின் கீழ் இருந்த 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால்,வேலை நாட்களில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தவறாமல் வேலைக்கு வர வேண்டும். அலுவலகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட நேரங்களில் ஊழியர்கள் வேலைக்குவரும் வகையில் ஷிப்ட் நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். இதை அந்த துறைத்தலைவர் தீர்மானிக்கலாம்.

அலுவலகக் கூட்டங்கள், பார்வையாளர்கள் சந்திப்புகளை வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையிலேயே தொடர்ந்து நடக்கலாம் . ஒருவேளை, மக்கள் நலனுக்காக கட்டாய கூட்டங்கள், சந்திப்புகள் என்றால் நேரடியாக நடத்திக் கொள்ளலாம்.

சிற்றுண்டிகள் திறந்து வைக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.