5G சேவையை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

- Advertisement -

ஹைலைட்ஸ்:

  • 5ஜி சேவை பற்றி இந்தியா முடிவு.
  • 5ஜி சேவை சோதனைக்கு மத்திய அரசு அனுமதி.
  • சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்தகூடாது.

இந்தியாவில் இதுவரை 4G சேவை மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது. இனி 5G சேவை பற்றி இந்தியா எடுத்த முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 5G யை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருபினும் அதே சமயத்தில் சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்தகூடாது என்றும் சீன நிறுவனங்களிடம் உதவி கேட்டக்கூடாது என்றும் 5G சேவை சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

அந்தவகையில் இந்தியா சீனாவின் Huawei ZTE ஆகிய நிறுவனங்களை ஒதுக்கி தள்ளுவது இந்திய மக்களுக்கும் உலகிற்கும் நல்லது என அமெரிக்கா எம்பிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உளவு பார்க்கும் நிறுவனங்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox