தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் நாளை முதல் 4 நாள்களுக்கு தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

See also  ஓட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் பெறலாம்..!