வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன் கூறியுள்ளார்.

 

See also  தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது