Dark Mode Light Mode

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்று்ம மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்க்ப்பட்டுள்ளது

Advertisement

சென்னையில் அடுத்து வரும் இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட். குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 பாரன்ஹீட் ஆக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Previous Post

தமிழகத்தில் மார்ச் 17ஆம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் சேவை

Next Post

ரேஷன் பயனாளிகளுக்கு மொபைல் ஆப் அறிமுகம்

Advertisement
Exit mobile version