தமிழக முதலவர் ஸ்டாலின் ஜூன் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் அளிக்க உள்ளார்.

இந்த அறிக்கையில் கொரோனா தடுப்பூசியை அதிகரித்தல், நீட் தேர்வை ரத்து செய்தல், GST நிலுவை தொகையை வழங்குதல், கருப்புப் பூஞ்சைக்கான கூடுதல் மருந்துகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை அளிக்க உள்ளதாக கூறபடுகிறது.

ஜூன் 18 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி அலையை தொடங்குவது தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி உள்ளார்.