கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை காற்றை போல வேகமாக பரவி வருகிறது. பிரபல நகைசுவை நடிகர் ‘பாண்டு’ கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிர் இழந்தார்.

பாண்டு அவருடைய மனைவி குமுதா இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிர் இழந்தார். அவருடைய மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

தமிழ் சினிமா துறையில் சிறந்த நகைசுவை நடிகரான இவர் 1975 ஆம் ஆண்டு ‘மாணவன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் 100 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். 74 வயது ஆன இவர் சின்னத்தம்பி, காதல் கோட்டை , வாய்மையே வெல்லும், வெற்றி கொடி கட்டு, சந்தோசம், லூட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நகைசுவை நடிகர் பாண்டுவிற்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த அவர் பல திரையுலக பிரபலங்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை அழகுற பலகைகளில் வடிவமைத்து வந்தார்.

ADMK கட்சியின் கொடியை வடிவமைத்தவர் நடிகர் பாண்டு. அவரின் மரணத்திற்கு பிரபலங்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

See also  கலவை விமர்சனங்களுடன் இணையத்தில் ஜகமே தந்திரம்..!