விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு பிரபலமான சீரியல்களின் மகா சங்கமம் நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களாகவே இந்த சீரியல்களின் மெகா சங்கமம் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தந்த சீரியல்களின் கதைக்கு ஏற்றவாரு எல்லா காட்சிகளையும் இயக்குனர் வைத்து வருகிறார்.

மகா சங்கமத்தில் இடம் பெற்றுள்ள இந்த இரண்டு சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட். சீரியலில் ஒரு பெரிய போட்டி ஒன்று நடந்து வருகிறது. சிரியலில் நடைபெறும் போட்டியின் நடுவர்களாக பிக்பாஸ் பிரபலங்களான ரியோ, சம்யுக்தா, சோம சேகர் வந்திருந்தனர். இந்த போட்டியில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா கலந்து கொண்டுள்ளனர். ராஜா ராணி 2 சீரியலில் செந்தில் மற்றும் சந்தியா கலந்து கொண்டுள்ளனர்.

அந்த சீன்கள் கூட அண்மையில் ஒளிபரப்பானது. அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் இந்த இரண்டு சீரியல் குழுவினருடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் சிவாங்கி மற்றும் பாலா புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் மகா சங்கமத்தில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக வர இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

 

 

 

See also  நாளை 34 அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளனர்

Categorized in: