• கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது.
  • கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியது. மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்தது.
  • தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று தமிழகத்தில் 2,181 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
  • தமிழகத்தில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 833 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உருவாகியிருக்கிறது.
  • மேலும் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 188 பேரும், கோவையில் 180 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,79,473 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை இந்நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,53,733 ஆக உள்ளது.
  • இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ,670 ஆக உயர்ந்து உள்ளது.
  • மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் இன்று ஒரேநாளில் 68,020 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இதனால், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. தற்போது இந்தியாவில் 1,19,71,624 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 1,20,39,844 ஆக உயர்ந்துள்ளது.
See also  இந்த வார இறுதியில் சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்