- Advertisement -
SHOP
Homeசெய்திகள்செரோ ஆய்வில் தகவல் தமிழகத்தில் 3ல் ஒருவருக்கும் கொரோனா

செரோ ஆய்வில் தகவல் தமிழகத்தில் 3ல் ஒருவருக்கும் கொரோனா

- Advertisement -
  • மத்திய அரசு ஆணையின் பெயரில் தமிழக அரசு நடத்தப்பட்ட கொரோனா தடுப்பு ஆய்வில் (செரோ) தமிழகத்தில் 3 ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2.26 கோடி பேருக்கு எதிர்ப்பு சக்தி இருந்தது இருந்ததாக கண்டறியப்பட்டது.
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரத்த மாதிரியின் அடிப்படையில் பரிசோதனை(செரோ) ஆய்வை மத்திய அரசு நாடு முழுவதும் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக சென்னையில் செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது கட்டமாக பிற மாநிலங்களில் அக்டோபர் 19ல் தொடங்கப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை மாவட்டம் வாரியாகவும், கிராமம் மற்றும் நகர்புறத்திலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என 4 பிரிவுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

முடிவுகள் வெளியிடப்பட்டது

பிப்ரவரி 8 ஆம் தேதி ஆய்வுகளின் முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 37 மாவட்டங்களில் அக்டோபர் 16 தேதி முதல் நவம்பர் 30 தேதி வரை கொரோனா கட்டுப்பாடு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 31.6 % பேரு கொரோனவால் பாதிக்கப்பட்டனர்.

நகர்ப்புற பாதிப்பு

36.9%பேர் நகரத்திலும், 26.9% பேர் கிராமங்களிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பிலும் ஆண்கள் 30.3 % பேர், பெண்கள் 30.8 % பேர், 18 முதல் 29 வயததுடையவர்கள் 30.7 % பேர் , 40 முதல் 49 வயதுடையவர்கள் 31.6 % பேர், 70 வயதுக்கு மேற்பட்டவர் 25.8 % பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர.

2.26 கோடி பேருக்கு கொரோனா

தமிழக சுகாதார துறை நடத்திய பரிசோதனையில் 2020 நவம்பர் மாதம் வரை 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா கட்டுப்படுத்தும் ஆய்வில் 2020 நவம்பர் மாத இறுதியில் 2.20 கோடி பேர் பதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறை தொற்று உறுதி செய்யப்ட்டவர்களை காட்டிலும் சுமார் 30 மடங்கு அதிகம்.மக்கள் தொகையில் 3 இல் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக காட்டுகிறது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

அரியலூர் 26.52%

கள்ளக்குறிச்சி 38.66%

செங்கல்பட்டு 34.19%

காஞ்சிபுரம் 34.30%

சென்னை 40.94%

கன்னியாகுமரி 35.40%

கோவை 20.43%

கரூர் 16.16%

கடலூர் 33.37%

கிருஷ்ணகிரி 18.92%

தர்மபுரி 19.06%

மதுரை 38%

திண்டுக்கல் 26.88%

நாகப்பட்டினம் 21.99%

ஈரோடு 18.88%

நாமக்கல் 17.04%

பெரம்பலூர் 51.05%

புதுக்கோட்டை 25.21%

ராமநாதபுரம் 35.03%

ராணிப்பேட்டை 45.09%

சேலம் 22.44%

தென்காசி 48.28%

சிவகங்கை 26.68%

தஞ்சாவூர் 26.58%

நீலகிரி 11.12%

தேனீ 44.33%

திருச்சி 32.79%

திருவாரூர் 21.56%

தூத்துக்குடி 37.91%

திருநெல்வேலி 43.47%

திருப்பத்தூர் 23.93%

திருப்பூர் 19.71%

திருவள்ளுர் 34.85%

திருவண்ணாமலை 36.18%

வேலூர் 27.72%

விழுப்புரம் 32.25%

விருதுநகர் 37.92%

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -