தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு பல்வேறு கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 5 ஆம் தேதி காலை உடன் முடிவடைய உள்ள நிலையில் அதில் 12ஆம் தேதி காலை வரை நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 • அதன்படி உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தாங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர்.
 • தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.
 • அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் நிகழ்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
 • கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு மையங்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.
 • தாங்கும் விடுதிகள், உறைவிடங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • அனைத்து வழிபாட்டு தலங்களும் சரியான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
 • அனைத்து மாவட்டத்திற்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து இயங்க அனுமதிக்கப்படும்.
 • கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க E-pass மற்றும் E பதிவு நடைமுறையை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பல்வேறு தளர்வுகள்அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த பூங்காக்களில் திறந்த வெளியில் நடத்தப்படும் விளையாட்டுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
 • M.phil, Phd போன்ற ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்க்கொள்ள அனுமதிக்கப்படுவர். கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செய்யப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமலில் உள்ள சில தடைகள்

 • மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு போக்குவரத்து அனுமதி இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு அனுமதி இல்லை.
 • திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி இல்லை. பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை.
 • பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயிரியல் பூங்காக்களை திறக்க அனுமதி கிடையாது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதி சடங்கு நிகழ்வுகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பன போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன