கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு 2020 மார்ச் தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 144 பொது ஊரடங்கு அறிவிக்கப் பட்டது.பிறகு ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது . கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தொற்று குறைய துவங்கியதும், இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை கொண்டுவரப்பட்டது. புத்தாண்டில் இருந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இருந்தும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருகிறது.

இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு. இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து, கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தினமும் ஆயிரத்திக்கு மேலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சற்று முன் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த மாதத்துடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இருந்தது, ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

See also  சர்வதேச மற்றும் உள்ளூர் பார்வையாளர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்