தமிழகத்தில் நடைபெற்ற நட்டமன்ற தேர்தலில் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை போக்க அரிசி குடும்ப அட்டை வைத்து உள்ளவர்களுக்கு கலைஞர் பிறந்த நாள் முதல் ரூ. 4000/– வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார்.

 

தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்து உள்ளது. ரூ.4153.39 கோடி செலவில், கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் 2,07,66,950 எண்ணிக்கையிலான அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து உள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 2,14,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். 2,14,950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும முதல் தவணையாக ரூ. 2,000 இம்மாதமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் 2 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.