திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பரவல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 தடுப்புசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் புதுப்பேட்டை, மாதனூர், நாட்றம்பள்ளி, குனிச்சி, உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு பள்ளிக்கூடங்களான புதுப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆண்டியப்பனூர், காக்னாம்பாளையம், ஆலங்காயம், வாணியம்பாடி, நியூ டவுன், ஜோலார்பேட்டை மேல்நிலைப்பள்ளி, நாட்றம்பள்ளி நடுநிலைப்பள்ளி, ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளிலும் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை,ஆம்பூர் உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகள் என 20 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். இந்நிலையில், தடுப்பூசி முகாம்களை கலெக்டர் சிவன்அருள், திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

See also  இன்று தங்கம் விலை சற்று உயர்வு