கொரோனவைரஸ் COVID-19

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சையின்றி குணமடைவார்கள்.

கொரோனா அறிகுறிகளும்… செய்ய வேண்டியவையும்…

  • சளி, காய்ச்சல், இருமல், வாசனை உணர்வு இல்லாமை, சுவை உணர இயலாமை, வயிற்றுப்போக்கு முதலானவை கொரோனாவுக்கான அறிகுறிகள்
  • அறிகுறிகள் இருப்பின், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கொரோனா
    பரிசோதனை மையத்தை நாடி ஆர்டிபிசி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்
  • ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்
  • கொரோனா உறுதியானால் மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை, சி.டி. ஸ்கேன் செய்ய வேண்டும்
  • ரத்த ஆக்சிஜன் அளவை அறிய குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி நிச்சயம் வைத்திருக்க வேண்டும்
  • கொரோனா அறிகுறிகள் தெரிய தொடங்கியதும் உடலில் ஆக்சிஜன் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
  • ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழ் குறைந்தால், நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை அவசியம்
    ஆகிறது ஆக்சிஜன் அளவு 90-க்கும் மேல் உள்ளது என்றால், வீட்டிலேயே தனியறையில்
    தனிமைப்படுத்திக்கொள்ளலாம்

Q&A – கொரோனா வைரஸ் (COVID-19)

கொரோனா வைரஸ் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க அவர்களது ரத்த மாதிரிகள் பயன்படுத்துவதில்லை. மாறாக அவர்களது எச்சில் அல்லது மூக்குச் சளி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் அல்லது, மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவில், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் அடுத்த 14 நாட்கள் அல்லது குணமாகும் வரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

கொரோன (Covid-19) பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால், தமிழகத்தில் யாரை அணுக வேண்டும்?

மத்திய நலத்துறை அமைச்சகத்தில் 24 மணி நேர உதவி எண்ணான 01123978046 அழைக்க வேண்டும். அல்லது, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்ப வேண்டும். உடனடியாக, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி உங்களை தொடர்புகொண்டு நோயின் தீவிர தன்மை குறித்து கேட்டறிவார். நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவீர்கள். கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதற்கென தனி ஆம்புலன்ஸ் வசதிகளை அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனி நபராக மருத்துவமனைக்கு பொது வாகனங்களில் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒருமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டால், மறுமுறை தொற்று ஏற்படுமா?

சரியாக தெரியவில்லை. சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது புதிய தொற்றா அல்லது முழுமையாக குணமடையாதவர்களா என்பது தெரியவில்லை என்கின்றனர். ஃபெர்ட் ஹட்சின்சன் புற்றுநோய் மருத்துவஆராய்ச்சி மருத்துவர் ஒருவர் கூறுகையில், கொரோனா வைரஸின் மரபணு மாற்றம் 30,000 நிலைகளை கொண்டதாகவும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு மாற்றகொண்டுவரும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், வைரசின் மரபணு நிலை குறித்து கண்டறியமுடியாததால், அது புதிய தொற்றா அல்லது குறைந்த காய்ச்சல் மீண்டும் தொடர்கிறதா என்று கண்டறியமுடியாத நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், கொரோனா தொற்றில் இருந்து தப்பிவிடலாமா?

ஒருவரின் நோய் எதிர்புசக்தி அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பதை பொருத்து நோயின் விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் தடுப்பு மையம் கூறியிருப்பதாவது, இரண்டு வகையான மனிதர்களை இந்த கொரோனா நோய்தொற்று ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். நுரையிரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, இருதயம் தொடர்பான பாதிப்புகளில் தொடர்சியாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருபவர்கள் மற்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஆகியோரை கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களும் போதுமான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முகமூடி ஏன் அணிய வேண்டும்?

உங்களுக்கு கோவிட் 19 தொற்று அறிகுறி இருந்து இருமல் பிரச்சனைக்கு பாதிக்கப்படிருந்தால் முகக்கவசம் அணியுங்கள். அல்லது இத்தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை பாதுகாக்கும் பணியில் இருந்தாலோ நீங்கள் முகக்கவசம் அணியலாம். ஒருமுறை மட்டுமே அணியக்கூடிய முகக்கவசத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தேவையில்லாமல் முக்ககவசம் அணிந்து அப்புறப்படுத்துவது முகக்கவசத்தை வீணடிப்பதாகவே இருக்கும். முக்கவசத்தை பயன்படுத்துபவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். அதோடுமட்டுமல்லாமல், கைகளை சோப் மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு நன்றாக அவ்வப்போது கழுவ வேண்டும்.