கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அடுத்தபடியாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசு 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தது. ஆனால் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து உள்ளனர்.

சட்ட மன்ற தேர்தலுக்கான பணி தொடங்கி விட்ட நிலையில் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக செல்ல இருப்பதால் பொது தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்டுகிறது. இதனால் பள்ளி கல்வி துறை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.