வாகனம் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவி

- Advertisement -

வாகனம் ஓட்டிச் செல்லும் போது துாங்குவதன் காரணமாக சாலை விபத்து நிகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டியும் டிரைவரை எழுப்பும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள, எச்.சி.இ.எம்.இ., எனப்படும், ராணுவ மின்னணு மற்றும் மெகானிகல் பொறியியல் கல்லுாரி ஒலி எழுப்பும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும்போது ஓட்டுபவர் கண்கள் மூடினால் ஒலியை எழுப்பி, அவரை விழிப்படையச்செய்யும் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளோம். வாகனம் ஓட்டுபவரின் இருக்கைக்கு அருகே, அவரது கண்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும்.

- Advertisement -

வாகனம் ஓட்டுபவர் கண்களை மூடும் போது கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட ‘ஐ ட்ராக்கர்’ எனப்படும் கருவி ஒலி எழுப்பி டிரைவரை விழிப்படையச் செய்யும். எல்லா நேரங்களிலும்(பகல் இரவு) இந்த கருவி செயல்படும் என்று கல்லுாரியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

இக்கருவியை, தெலுங்கானா மாநில வர்த்தகத்துறை முதன்மை செயலரிடம் தகவல் தொழில்நுட்ப கல்லுாரி நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வாகனங்களில் இந்த கருவியை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox