தீபாவளி வாழ்த்துக்கள் 2024 – Diwali Kavithai Wishes in Tamil

Happy diwali on Thursday 31 October, 2024 Here you can get the Diwali kavithai and Diwali Greeting images for your Social status, reels, shorts and Stories. இந்தாண்டு தீபாவளியில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் (Diwali Status 2024), ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் எந்த மாதிரியான வாழ்த்துக்களை வைக்கலாம் என்பதை இங்கு காணலாம். இவற்றை உங்கள் ஸ்டேட்டஸ்களாக வைத்து மற்றவர்களின் பாராட்டையும், அன்பையும் பெறுங்கள்.

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். இதற்கு முன்பெல்லாம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது வாழ்த்து அட்டைகளை வழங்கி வந்த காலம் இருந்தது. அதன் முன்னேற்ற பரிமாணமாக தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஸ்டேட்டஸாகப் பகிர்கிறோம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான தீபாவளி வாழ்த்து ஸ்டேட்டஸ்களாக என்ன வைக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.

தீபாவளி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் – Diwali Whatsapp Status 2024:

  • உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த தீபத்திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் தரட்டும்.
  • குடும்பங்கள் கொண்டாடும் தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்
  • உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  • இந்த தீபாவளியில் தீப ஒளி ஏற்றி, அகவிருளை அகற்றுவோம், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  • தீபம் போல் உங்கள் உங்கள் வாழ்வும் பிரகாசிக்கட்டும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  • இந்த தீபாவளி நாள், இனிய நாளாக அமையுமாக. அருட்பேராற்றால் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க.
  • தீபத்திருவிழா தீபாவளியில், வான்வெளி வரைக்கும் உற்சாகம் பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
  • மத்தாப்பு போல் மகிழ்ச்சி பொங்க, தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  • இனிமை, இளமை, புதுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  • பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த தீபத் திருவிழா உங்கள் வீட்டை மகிழ்ச்சியாலும், உங்கள் இதயத்தை அன்பாலும் நிரப்பட்டும்.
  • இந்த தீபாவளி முதல் நீங்கள் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
  • பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்! தீபத் திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரட்டும்.
  • இந்த தீபாவளியில் எந்தளவு முடியுமோ அந்தளவு மகிழ்ச்சியாக இருங்கள்! அனைவரும் அன்பு, நிம்மதி, சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.

 

தீபாவளி வாழ்த்து கவிதைகள் 2024


அனைவர் வாழ்விலும்
இருள் மறைந்து
ஒளி மலர
அன்பான உறவுகளுக்கு
தீபாவளி நல் வாழ்த்துக்கள்


இருப்பவர்கள்
கொண்டாட்டங்களை பல
வழியிலும் கொண்டாடுகிறார்கள்
இல்லாதவர்கள்
தீபாவளியைகூட வலியோடே
கொண்டாடுகின்றனர்


பட்டாசுகளில்
எரிவது பணம் என்றாலும்
அதனால் கொதிப்பது
தொழிலாளியின் வீட்டில்
உலை என சந்தோஷபடுங்கள்


அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்…!

வருடத்தில் ஒரு முறை
வந்து போகும் தீபாவளி
ஏழை எங்கள் வீட்டையும்
எட்டி பார்க்கும் தீபாவளி
அன்னையின் அன்பால்
எங்கள் வாழ்விலும்
இன்பம் தரும் தீபாவளி…!


தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என்னெய் தேய்த்து நீராடி
இருட்டை கிழித்து விளக்கேற்றி
வன்ன வன்ன புத்தாடை
வகை வகையான பலகாரம்
சின்ன சின்ன மத்தாப்பு
சிதரிவெடிக்கும் பட்டாசு
கண்ணை கவரும்
ஒளி வண்ணம் கானும்
நாளே நம் திருநாளாம்


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இந்த இனிய நாளில்
தீபங்களில் இருந்து
வரும் ஒளியைப்போல்
உங்கள் வாழ்க்கையும்
பிரகாசிப்பதோடு
அன்பையும்
இனிப்பு பலகாரங்களையும்
உறவுகள் மற்றும்
நண்பர்களுக்கு பகிர்ந்து
இந்த இனிய நாளை
மகிழ்ச்சியுடன் கொண்டாட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இந்த 2021 சற்று
நம்மை ஆட்டிப் படைத்த
வருடம் தான்
அணைத்து கஷ்டங்கள்
துயரங்கள் வேதனைகளை
சரவெடியை போல்
உடைத்தெறிந்து
தீப ஒளியைப்போல்
பிரகாசமாக
இந்த இனிய நன்னாளை
மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்


தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஒரு பாசிட்டிவ் வைப் உடன்
இந்த இனிய நாளை
கொண்டாடுவோம்
பட்டாசின் ஒளியைப்போல்
உங்கள் வாழ்க்கையிலும்
மகிழ்ச்சி மற்றும்
நல்ல காலங்கள் ஒளித்திட
என் மனமார்ந்த
தீப ஒளி வாழ்த்துக்கள்


இந்த தீபாவளி
உங்கள் வாழ்க்கையில்
சுகமும் சந்தோஷமும்
நிறைவாக மலரட்டும்
நீங்களும் உங்கள்
குடும்பமும் என்றும்
மகிழ்ச்சியாகவும்
ஆரோக்கியமாகவும்
சிறப்புடன் வாழ
என் இதயபூர்வமான
வாழ்த்துகள்


தீபங்கள் போல்
உங்கள் வாழ்வில்
எதுவும் தடை இல்லாமல்
சுகம் நலம் வளரட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்


இந்த தீபாவளி
உங்கள் குடும்பத்திற்கும்
நண்பர்களுக்கும்
மகிழ்ச்சி, நிம்மதி, நலத்தை
கொண்டுவரட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

தீபாவளி வாழ்த்துக்கள் 2024

diya lamps lit diwali celebration greetings design indian hindu diwali background 30 1257089 2943

A Very Happy & Bright Diwali to You and your Family

Deepavali valthukkal in Tamil

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2024

Diwali 2024 wishes in tamil

Happy Diwali Wishes In Tamil

Happy Diwali Festivalof Lights

 

13 Shares:
You May Also Like
Read More

Happy Diwali Wishes in Tamil – 🎉 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 2024

Happy Diwali Wishes in Tamil – தீபாவளி திருவிழா ஒளி, மகிழ்ச்சி மற்றும் நன்மையின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தீமையை அகற்றி நன்மையை பறைசாற்றும்…
Read More

ஒரு வரி தத்துவம் – Inspirational quotes in Tamil language

ஒரு வரி தமிழ் கவிதை என்பது ஒரு வரியில் முழுமையாக உள்ளடக்கம் கொண்ட கவிதையாகும். இது அழகியல் உணர்ச்சியுடன், ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை…
Read More

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் – Mattu Pongal Wishes in Tamil

“மாட்டு பொங்கல்” அல்லது “தை பொங்கல்” என்றும் அழைக்கப்படும் இந்த திருநாள் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் பல பாரதநாடுகளில் வரும் பொங்கல் விழாக்களில் ஒன்றாகும்.…
Read More

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள்

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள் : வாழ்க்கை என்பது ஒரு பயணமாகும், இதில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அனுபவங்கள் இருக்கும். வாழ்க்கையின் பொருள்,…