• அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றாகும்.
  • தற்போது அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பதை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
  • தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் மக்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது.
  • நீட் தேர்வு ரத்து, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.
  • கடந்த ஆண்டு தமிழக அரசிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி 1000 ரூபாய் மட்டும் வழங்கியது.
  • இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீதமுள்ள 4000 ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்கள்.
  • திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது ரேஷன் அட்டை தாரர்களுக்கு 4000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பதை பற்றி பேசினார்.
  • வரும் மே மாதம் 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. ஜுன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ரேசன் அரிசி அட்டை தாரர்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

 

See also  இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி..!