நடிகர் ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் டிசம்பர் 3 தேதி அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். அதன் பிறகு உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று இருந்தார்.

உடல்நிலை குறைவை கரணம் காட்டி திடீரென நான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் வெறுத்துப்போன ரசிகர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் ரஜினி நேரடியாக இந்த போராட்டம் பற்றி ரசிகர்களுக்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. பதிலும் சொல்லவில்லை.

இன்று காலை ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டார்.அவர் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

அனுமதியின்றி இந்நிகழ்ச்சியை நடத்தியது வருத்தத்தை அளிக்கிறது இருந்தாலும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள், உத்தரவை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

நான் என் அரசியலுக்கு வர முடியவில்லை என்று ஏற்கனவே அறிவித்து இருந்தேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியதுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

 

 

See also  ஸ்பெஸ் X நிறுவனம் 60 செயற்கைகோள்களை நேற்று விண்ணில் செலுத்தியது