Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இன்று(17 ஆம் தேதி) முதல் மாவட்டங்களுள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பயணம் செய்ய e-pass கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

E-pass விண்ணப்பிக்கும் முறை

இணைய பதிவு செய்ய https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதள முகவரியை open செய்ய வேண்டும். தொலைபேசி எண்ணை பதிவு செய்த பின் OTP தொலைபேசி எண்ணிற்கு வரும் அதை பதிவு செய்த பிறகே உள்நுழைய முடிவும்.

இதில் மூன்று வகையான அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த வகையில் பயணம் செய்ய போகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். தனி நபர்/குழு சாலை வழி பயணம். தனி நபர்/குழு ரயில்/விமானம் வழி தமிழ் நாட்டின் உள் நுழைதல். தொழில் நிறுவனங்கள்

E PASS

பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு நான்கு வகையான காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
மருத்துவ அவசரம்
முதியவர் பராமரிப்பு
பிறப்பு மற்றும் இறப்பு சார்த்த காரியங்கள்
திருமணம்

E PASS1

தனிநபர் வாகனத்தில் பயணம் செய்தால் வாகன எண் குறிப்பிட வேண்டும். ரயில் அல்லது விமானம் மூலம் பயணம் செய்தால் பயண சீட்டின் எண், ரயில், விமான எண் மற்றும் இருக்கை விவரம் குறிப்பிட வேண்டும்.

இணைய பதிவு செய்ய 5 வகையான ஆவணங்கள் இருக்க வேண்டும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண், ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு ஆகியவற்றில் எதாவது ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணைய பதிவு செய்த பிறகு அதற்க்கான சான்று உங்களுக்கு கிடைக்கும். அந்த சான்றை பயப்படுத்தி நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம்.

Share: