தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது நிலை ஆரம்பித்துவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு பாதிப்புகள் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. மும்பை, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று வரவல் அதிகரிப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரதமர் நரேந்திரமோடி கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்தக் ஆலோசனை கூட்டத்தில் அடுத்த ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் பொது வேட்பாளர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஏதேனும் கட்டுப்பாடுகள் போடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் அடுத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.

See also  ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சலுகை