யூரோ கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வென்ற இங்கிலாந்து அணி

யூரோ கால்பந்து தொடரில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வெற்றி கொண்டதைக் அடுத்து அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் ஜெர்மனி ரசிகர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் வீதிகள் அனைத்தும் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர் காரணம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கிடைத்த வெற்றிதான் கால்பந்து உலகில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் பரம எதிரிகளாக கருதப்படும். இரு நாட்களும் மோதினாலே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும்.

ENGLAND

1966ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் மோதி ஆட்டத்திற்கு பின்னர் தான் இரு நாடுகளுக்கு இடையில் போட்டி உச்சம் பெற்றது. விளைவு ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் ஒரு நாட்டில் கொண்டாட்டமும் மற்றொரு நாட்டில் சோகமும் இடம் பிடித்துவிடும். தற்போது இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்த நிலைதான்.

தற்போது நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் விளையாடிய இங்கிலாந்து அணி 2-0 கணக்கில் வெல்ல உச்சகட்ட மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் இங்கிலாந்து ரசிகர்கள். வீதிகள் அனைத்தும் கொண்டாட்டமாகவே காணப்படுகிறது.

பாடல்கள் பாடியும் நடனமாடியும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்க ஜெர்மனி ரசிகர்கலோ ஏமாற்றத்தில் உறைந்து உள்ளனர். கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனியின் தோல்வியை அந்நாட்டு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும் தங்களின் பரம எதிரியான இங்கிலாந்திடம் தோற்று போட்டியை விட்டே வெளியேறுவது ஜெர்மனி கால்பந்து ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது.

0 Shares:
You May Also Like
Read More

தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்

ஒலிம்பிக் தொடரை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒலிம்பிக் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள…
Read More 1

எளிதான தமிழ் விடுகதைகள்

பழங்கால நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சூப்பர் ஹீரோ சாகாக்களின் அடித்தளமாக புதிர்கள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் புராணக் கதாநாயகர்களிடம்…
Read More

GG vs DC WPL 2025 Match 17 Result: நேற்றைய WPL போட்டியில் யார் வென்றார்கள்? ஸ்கோர்கள், முக்கிய நிகழ்வுகள் & விருது பெற்றவர்கள்

ஹார்லின் டியோல் அபாரமாக ஆடி, அரைசதத்துடன் அபார இன்னிங்ஸ் வெளிப்படுத்தியதால், குஜராத் ஜயன்ட்ஸ் (GG) டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்…
Read More

இன்று அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடக்கம்

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய…
Read More

கிரிக்கெட் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர்

ஹைலைட்ஸ்: பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக…