தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த  கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மேலும் 3 மாத கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது.

அதாவது வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதி வரை மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம்  மற்றும் வாகன பதிவு ஆகியவற்றின் ஆவணங்களை புதுப்பித்தல் கொள்ளலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்கூறியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பலமுறை கால நீட்டிப்பு கொடுத்துள்ளது.

மேலும் கடைசியாக இந்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இச்சூழலில் தற்போது  ஜூன் மாதம் 30-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

அனைத்து மாநிலங்களும் இந்த கால நீட்டிப்பு உத்தரவை ஏற்று செயல்படுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச டி.ஜி.பி.க்கள், போக்குவரத்துத்துறை செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

See also  முதல்வர் ஸ்டாலின் தொண்டு நிறுவனங்களுடன் நாளை ஆலோசனை